மராட்டியத்தில் மாரத்தான் ஓட்டத்தின் போது சரிந்து விழுந்த நபர் உயிரிழப்பு

மராட்டியத்தில் மாரத்தான் ஓட்டத்தின் போது சரிந்து விழுந்த 32 வயது நபர் உயிரிழந்தார்.;

Update: 2022-09-18 16:09 GMT

கோப்புப்படம்

சதாரா,

மேற்கு மராட்டியத்தில் உள்ள சதாரா நகரில் இன்று நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தின் போது சரிந்து விழுந்த 32 வயது நபர் உயிரிழந்தார்.

சதாரா ரன்னர் அறக்கட்டளை என்ற இலாப நோக்கற்ற அமைப்பு ஒன்று சதாரா ஹில் ஹாஃப் மராத்தான் (SHHM) ஓட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த 21 கிமீ மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட கோல்ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் படேல் என்பவர் ஓட்டத்தை நிறைவு செய்யும் நேரத்தில், இறுதி கோட்டிற்கு சில மீட்டர் தொலைவில் சரிந்து விழுந்தார்.

சரிந்து விழுந்த ராஜ் படேலை மாரத்தான் அமைப்பாளர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். போலீசார் இதுகுறித்து விபத்து மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்