மொபைல் திருடிய வாலிபர் ஓடும் ரெயிலிலிருந்து தூக்கி வீசி கொலை

ஓடும் ரெயிலில் பெண் பயணியிடமிருந்து மொபைல் திருடிய நபரை, பயணி அடித்து உதைத்து, ரெயிலில் இருந்து வீசி எறிந்ததில் அந்த நபர் மரணம் அடைந்தார்.

Update: 2022-12-19 08:26 GMT

புதுடெல்லி

டெல்லிலிருந்து அயோத்தியா சென்று கொண்டிருந்த ரெயிலில் பயணித்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த பெண் பயணியின் மொபைல் போனை திருடியுள்ளார். தனது மொபைல் காணாமல் போனதாக பெண் கூறியதையடுத்து, அங்கிருந்தவர்கள் அதனை தேடியுள்ளனர். அப்போது, ஒரு இளைஞரிடம் அந்த மொபைல் இருந்ததையடுத்து, அங்கிருந்த பயணிகள்இளைஞரை அடித்து உதைத்து இழுத்துச் சென்று ஓடும் ரெயிலிலிருந்து கீழே தள்ளியுள்ளனர்.

இதில், தில்கார் ரெயில் நிலையம் அருகே, ரெயில் கம்பத்தின் மீது அந்த நபரின் தலை மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இது தொடர்பாக, இளைஞரை ரெயிலிலிருந்து தள்ளிய நரேந்திர துபே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இளைஞரை அடித்து உதைத்து, அவர் கெஞ்சி கேட்டும் ரெயிலிருந்து தள்ளும் விடியோவை ஆதாரமாக வைத்து குற்றவாளி நரேந்திர துபே கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்