காதலை முறித்ததால் ஆத்திரம்: முன்னாள் காதலி பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி உறவினர்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய காதலன்
முன்னாள் காதலியின் பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி அந்த காதலியின் தந்தை புகைப்படத்தை ‘புரோபைல் பிக்சராக’ வைத்துள்ளான்.;
டெல்லி,
காதலை முறித்ததால் முன்னாள் காதலியை பழி தீர்க்க அவரது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி முன்னாள் காதலியின் தந்தை புகைப்படத்தை புரோபைல் பிக்சராக வைத்து அந்த பெண்ணின் உறவினர்களுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியின் நஜப்ஹர் பகுதியை சேர்ந்த இளம்பெண் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கை தொடங்கி அதில் தன் தந்தையின் புகைப்படத்தை புரோபைல் பிச்சராக வைத்து தனது உறவினர்களுக்கு யாரோ ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாக புகார் அளித்தார்.
இந்த புகாரையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணியின் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி ஆபாச மெசேஜ்களை அனுப்பிய விவேக் (வயது 21) என்ற இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் விவேக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. புகார் அளித்த இளம்பெண்ணும் கைது செய்யப்பட்ட விவேக்கும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
சமீபத்தில் விவேக்குடனான தனது இளம்பெண் முறித்துக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த விவேக் தன் முன்னாள் காதலியை பழிதீர்க்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தன் முன்னாள் காதலியின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு தொடங்கியுள்ளார். அந்த இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு முன்னாள் காதலியின் தந்தை புகைப்படத்தை புரோபைல் பிக்சராக வைத்துள்ளார்.
பின்னர், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து முன்னாள் காதலியின் உறவினர்களுக்கு ஆபாச மேசேஜ்கள் மற்றும் மிரட்டல் மெசேஜ்களை விவேக் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, முன்னாள் காதலியின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி ஆபாச மெசேஜ்களை அனுப்பிய காதலன் விவேக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.