சிறுமிக்கு 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை - சலூன்கடைக்காரருக்கு ஆயுள்

சிறுமியை 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சலூன்கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-18 17:43 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் டோனிக் மாவட்டம் உனியாரா பகுதியில் சலூன்கடை வைத்திருப்பவர் குஷிராம் சைன். இவர் அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 2017-ம் ஆண்டு முதல் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

அந்த சிறுமிக்கு செல்போனை பரிசாக கொடுப்பது போன்று மயக்கி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தொடர்ந்து 2020 நவம்பர் மாதம் அந்த சிறுமியை கடத்திய அருகே உள்ள பெண்டி கிராமத்தின் விவசாய நிலப்பகுதியில் உள்ள வீட்டில் பூட்டி வைத்துள்ளான். அங்கு சிறுமியை குஷிராம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டதுடன் குஷிராமை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் விசாரித்துவந்த கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், சிறுமியை 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சலுன்கடைக்காரர் குஷிராம் சைனுக்கு ஆயுள் தண்டனையும், 1.60 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.      

Tags:    

மேலும் செய்திகள்