சிறையில் உள்ள கணவரை ஜாமினை வெளியே கொண்டு வருவதாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்
சிறையில் உள்ள கணவரை ஜாமினில் வெளியே கொண்டு வருவதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் பஹ்வாரா பகுதியை சேர்ந்த பெண்ணின் கணவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
அவரை சிறையில் இருந்து ஜாமினில் வெளியே கொண்டு வர உதவுவதாக அந்த பெண்ணிடம் அதேபகுதியை சேர்ந்த ஸ்வர்பூ சிங் பழகியுள்ளார். இதை நம்பிய அந்த பெண் ஸ்வர்பூ சிங்கிற்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கணவரை ஜாமினில் வெளியே எடுப்பது தொடர்பாக பேச வேண்டுமென அந்த பெண்ணை ஸ்வர்பூ சிங் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அங்கு அந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளார். அதை குடித்த அப்பெண் மயங்கியுள்ளார்.
பின்னர், மயங்கிய நிலையில் இருந்த அந்த பெண்ணை ஸ்வர்பூ சிங் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.
மயக்கம் தெளிந்த அந்த பெண் தனக்கு நடந்த கொடூரம் குறித்து அறிந்துள்ளார். ஆனால், இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என்று ஸ்வர்பூ சிங் மிரட்டியுள்ளான்.
இதனை தொடர்ந்து, மயக்கமருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஸ்வர்பூ சிங் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து சிறையில் உள்ள கணவரை ஜாமினை வெளியே கொண்டு வருவதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஸ்வர்பூ சிங்கை போலீசார் நேற்று கைது செய்தனர்.