விமானத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக வெடிகுண்டு இருப்பதாக போலி அழைப்பு விடுத்த நபர் கைது

விமானத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக வெடிகுண்டு இருப்பதாக போலி அழைப்பு விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2023-02-20 15:30 GMT

ஐதராபாத்,

ஐதராபாத் விமான நிலையத்திற்கு இன்று திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த பயணி ஒருவர் விமானத்தை தவறவிடக்கூடாது என்பதற்காக வெடிகுண்டு இருப்பதாக அழைப்பு விடுத்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, விமான நிலைய பாதுகாப்புப் படையினர் உடனடியாக விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேற்றினர். பின்னர் விமானத்தில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், சென்னை செல்லும் விமானத்தை பிடிக்க தாமதமாக வந்த பயணி ஒருவர், போலி அழைப்பு விடுத்தது தெரியவந்தது. அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்