டெல்லி கோர்ட்டு வளாகத்தில் பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது

தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற காமேஷ்வர் சிங்கை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-22 11:39 GMT

புதுடெல்லி,

டெல்லி சாகெத் பகுதியில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று விசாரணைக்கு வந்த ராதா(40) என்ற பெண் மீது ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த பெண்ணை அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலும், கையிலும் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. இந்த தாக்குதலை நடத்திய நபரின் பெயர் காமேஷ்வர் சிங் என்பதும், முன்னாள் வக்கீலான இவர் பார் கவுன்சிலால் தடை செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற காமேஷ்வர் சிங்கை, குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். அவரை போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு காமேஷ்வர் சிங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்