10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது நபர் - அதிர்ச்சி சம்பவம்

10 வயது சிறுமியை 50 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-09 20:55 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டம் ஹுர்ஜா ஜங்ஷன் சவ்கி பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த 50 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 10 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர், இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று சிறுமியை அந்த நபர் மிரட்டியுள்ளார். தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.    

Tags:    

மேலும் செய்திகள்