மலாலி மசூதி வழக்கு விசாரணை நவம்பர் 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு- மசூதியில் தற்போதைய நிலை தொடர கோர்ட்டு உத்தரவு

மலாலி மசூதி வழக்கு விசாரணை நவம்பர் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து மங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதுவரை மசூதியில் தற்போதைய நிலை தொடரும்படி தெரிவித்துள்ளது.

Update: 2022-10-18 18:45 GMT

மங்களூரு: மலாலி மசூதி வழக்கு விசாரணை நவம்பர் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து மங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதுவரை மசூதியில் தற்போதைய நிலை தொடரும்படி தெரிவித்துள்ளது.

மலாலி மசூதி விவகாரம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே மலாலியில் உள்ள மசூதி புனரமைக்கப்படும்போது இந்து கோவில்களின் அடையாளங்கள் இருந்ததாக தகவல் வெளியானது. இதையறிந்த இந்து அமைப்பினர் ஞானவாபி மசூதியை போன்று மலாலி மசூதியையும் ஆய்வு நடத்தும்படி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அவர்கள், மங்களூரு 3-வது கூடுதல் சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதி விவகாரத்தை விசாரணை நடத்த சிவில் கோர்ட்டுக்கு உரிமை இல்லை என்றும், வக்பு வாரிய கோர்ட்டு விசாரணை நடத்தவேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை ஏற்று மங்களூரு 3-வது கூடுதல் கோர்ட்டு விசாரணை நடத்தி வந்தது.

விசாரணை ஒத்திவைப்பு

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார். இதையடுத்து வழக்கை நவம்பர் மாதம் 9-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

மேலும் அப்போது எந்த கோர்ட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படும் என்றும், அதுவரை மலாலி மசூதியில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்றும் தெரிவித்து உத்தரவிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்