சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் முதன்மை நோக்கம் - யோகி ஆதித்யநாத்

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் முதன்மை நோக்கம் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-27 06:59 GMT

லக்னோ,

உத்தரபிரதேசம் மீரட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், நலத்திட்டங்கள், சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் அவர்களுக்கு தகுதியான அதேஅடிப்படையில் நடத்தப்பட வேண்டும். பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றகளை எந்த விலைகொடுத்தாயினும் ஒடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே அரசின் முதன்மை நோக்கம். குற்றவாளிகள், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாது. அந்த செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்படவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்