மராட்டியத்தில் 36 பேருக்கு உருமாறிய வைரஸ் தொற்று

மராட்டியத்தில் புதிதாக 36 பேருக்கு உருமாறிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-07-17 16:12 GMT

மும்பை,Mahrastara covid 19 reports on July 17

மராட்டியத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்து 19 ஆயிரத்து 391 ஆக அதிகரித்தது. இதில் 78 லட்சத்து 55 ஆயிரத்து 840 பேர் குணமடைந்தனர். இன்று மட்டும் 2 ஆயிரத்து 382 பேர் குணமாகினர். தற்போது மாநிலத்தில் 15 ஆயிரத்து 525 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல புதிதாக 3 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர். இதுவரை 1 லட்சத்து 48 ஆயிரத்து 26 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 36 பேருக்கு ஒமைக்ரான் போன்ற உருமாறிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் மும்பையில் இன்று புதிதாக 276 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. 2 பேர் பலியானார்கள். நகரில் இதுவரை 11 லட்சத்து 21 ஆயிரத்து 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்