மைசூரு அசோக் நகர் அம்பேத்கர் பூங்காவில் மகிஷாசூரன் தசரா விழா கொண்டாட்டம்
மைசூரு அசோக் நகர் அம்பேத்கர் பூங்காவில் மகிஷாசூரன் தசரா விழா கொண்டாடப்பட்டது.;
மைசூரு;
மகிஷாசூரன் தசரா
ைமசூருவில் தலித் அமைப்பினர் மகிஷாசூரன் தசரா விழா கொண்டாட மாநில அரசிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் மாநில அரசு மகிஷாசூரன் தசரா விழாவை கொண்டாட அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் நேற்று ைமசூரு அசோக்நகரில் இருக்கும் அம்பேத்கர் பூங்காவில் மகிஷாசூரன் தசரா விழா கொண்டாடப்பட்டது.
பூங்காவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகிஷாசூரன் உருவப்படத்துக்கு முன்னாள் மேயர் புருசோத்தமன், காந்திநகர் உரிலிங்கி பெத்தி மடத்தின் மடாதிபதி ஞானபிரகாச சுவாமி, எழுத்தாளர் கே.எஸ்.பகவான் மற்றும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மரியாதை செலுத்த வேண்டும்
இதையடுத்து முன்னாள் மேயர் புருசோத்தமன் பேசுகையில், ஜனநாயக நாட்டில் மக்கள் யாரை வேண்டுமானால் ஆதரிக்கலாம். இது அவரவர் உரிமை. ஆனால் இந்த அரசு மகிஷாசூரன் தசரா கொண்டாட தடை விதித்துள்ளது. வீரசாவர்க்கர், கோட்சேவை கொண்டாடும் பா.ஜனதாவினர் மன்னராக இருந்து நல்லாட்சி புரிந்த மகிஷாசூரனை கொண்டாட தயங்குகிறார்கள்.
புத்தர் போன்று இருந்த மகிஷாசூரனை ராட்சசன் அளவுக்கு எழுதி வரலாற்றை மாற்றி உள்ளனர். தலித் மக்கள் மகிஷாசூரனை ஆதரித்து நினைவுபடுத்தி அவரது நினைவு நாளாக கொண்டாடுகிறார்கள். மகிஷாசூரன் நமது பூர்வீக குலத்தை சேர்ந்தவர்.
மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமுண்டி மலைக்கு வருகிறார். அவர் சாமுண்டி மலைக்கு செல்லும்போது மகிஷாசூரன் சிலையை மூடி வைப்பார்களா?. தைரியம் இருந்தால் மகிஷாசூரன் சிலையை மூடி வைக்கட்டும். ஜனாதிபதி சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்லும் முன்பு மகிஷாசூரன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.