ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் கடற்கரையில் நின்ற படகு! மராட்டியத்தில் பரபரப்பு - உஷார் நிலையில் போலீஸ்

மராட்டிய மாநிலத்தில் ராய்காட் கடற்கரையில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் நின்ற படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.;

Update: 2022-08-18 09:49 GMT

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் ராய்காட் கடற்கரையில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் நின்ற படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

மராட்டிய மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள கடலில், ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. படகு கண்டுபிடிக்கப்பட்ட இடம் மும்பையில் இருந்து 200 கிமீ தொலைவிலும், புனேவில் இருந்து 170 கிமீ தொலைவிலும் உள்ளது.

ராய்காட் ஹரிஹரேஷ்வர் கடற்கரை அருகே கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒரு படகில், உடைக்கப்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இவ்விழாவின் போது மக்கள் இங்கு பெருமளவில் வருவார்கள். இந்நிலையில் பாதுகாப்பு ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

ஆகவே இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்துமாறு மராட்டிய முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ராய்காட் எம்எல்ஏ அதிதி தட்கரே செய்தியாளர்களிடம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்