மராட்டியம்: பரேக் மருத்துவமனை அருகே திடீர் தீ விபத்து

மராட்டியத்தில் மும்பை நகரில் பரேக் மருத்துவமனை அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-12-17 09:48 GMT



மும்பை,


மராட்டியத்தின் மும்பை நகரில் கத்கோபர் என்ற இடத்தில் பரேக் என்ற பிரபல மருத்துவமனை அமைந்து உள்ளது. இந்த மருத்துவமனையானது, கண் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சையை அளித்து வருகிறது.

இதனருகே உள்ள 6 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் திடீரென்று இன்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்ததும், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

அந்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. கட்டிடத்தின் உயரே ஏற்பட்ட தீ விபத்து எதிரொலியாக, வான் வரை கரும்புகை பரவியது.

தீ விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களின் நிலைமை என்னவென தெரியவில்லை. தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்