மராட்டியத்தில் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உயர்வு
மராட்டியத்தில் நேற்று 1,045- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 1,134 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா 3-வது அலை ஓய்ந்த நிலையில், நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்த நிலையில் கடந்த மாதம் முதல் தொற்று மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது.
இதில் கடந்த மாதம் 26-ந் தேதி பாதிப்பு 500- ஐ தாண்டியது. அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து, கொரோனா பாதிப்பு இன்று ஆயிரத்தை கடந்துள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி இன்று தொற்று பாதிப்பு 1,134- ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 24-ந் தேதிக்கு பிறகு அதிக பாதிப்பு இதுவாகும்.
தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிசையில் உள்ளனர்.
மராட்டியத்தில் நேற்று 1,045- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 1,134 ஆக உயர்ந்துள்ளது.