கடவுள் என்னை அழைக்கிறார்....கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்

மராட்டியத்தில் இளைஞர் ஒருவர் கடவுள் தன்னை அழைப்பதாக கூறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-02 00:57 GMT

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் 26 வயது இளைஞர் ஒருவர், தனது வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் ராணா பிரதாப் நகர் பகுதியில் நேற்று நடந்ததாக போலீசார் ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சோலாப்பூரை சேர்ந்த சூர்யகாந்த் மல்வத்கர் என்பதும், நாக்பூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

சம்பவ இடத்தில் இருந்து ஒரு தற்கொலைக் குறிப்பு ஒன்றை போலீசார் கண்டறிந்தனர். அதில், தன்னை கடவுள் அழைப்பதால், இந்த முடிவை எடுக்கிறேன் என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து மரணமாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்