அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: டிஜிபிக்கு மராட்டிய கவர்னர் உத்தரவு

மராட்டியத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபிக்கு மராட்டிய கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2022-06-26 12:23 GMT

மும்பை,

மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி கொரோனா பாதிப்பால் கடந்த புதன் கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 80 வயதான பகத் சிங் கோஷ்யாரி கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது தொடர்பாக மராட்டிய கவர்னர் மாளிகை செய்திக் குறிப்பில், " 4 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்த மராட்டிய கவர்னர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கவர்னர் மாளிகை திரும்பினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மராட்டிய அரசு திரும்ப பெற்ற நிலையில், கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்