மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 15 சதவீதம் அதிகரிப்பு - 3 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
மும்பை,
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தற்போது அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் 11,881 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 926 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 803 ஆக இருந்த நிலையில் இன்று 15 சதவீதம் அதிகரித்து 926 ஆக உள்ளது. மும்பையில் 276 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றை விட 27 சதவீதம் அதிகமாகும்.
மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,48,457 ஆக உள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 423 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மராட்டியத்தில் 4,487 கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.