மராட்டிய முதல்-மந்திரியாக பெறுப்பேற்றுக்கொண்டார் ஏக்நாத் ஷிண்டே

மந்திராலயாவில் உள்ள அலுவலகத்தில் முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்று கொண்டார். அவரது அறையில் பால் தாக்கரே, ஆனந்த் திகேவின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Update: 2022-07-07 13:52 GMT

மும்பை,

சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சியை அமைத்து உள்ளார். அவர் கடந்த வாரம் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் அவர் மந்திராலயாவில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதையொட்டி மந்திராலயாவின் 6-வது மாடியில் உள்ள முதல்-மந்திரி அலுவலகம் பூங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மேலும் அந்த அறையில் பால் தாக்கரேயின் படம் பெரிய அளவில் ஏக்நாத் ஷிண்டேவின் இருக்கைக்கு பின்னால் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் சிவசேனா தலைவர் ஆனந்த் திகே, பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் படங்களும் வைக்கப்பட்டு இருந்தன.

முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பலர் வாழ்த்து கூறினர். முன்னதாக ஏக்நாத் ஷிண்டே அணியினர் பால் தாக்கரேவின் படத்தை பயன்படுத்த கூடாது என உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். இதுகுறித்து ஏக்நாத் ஷிண்டே அணி செய்தி தொடர்பாளர் தீபக் கேசர்கள் எம்.எல்.ஏ. கூறுகையில், " பால் தாக்கரே ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் சொந்தமானவர். இந்த உண்மையை யாராலும் மாற்ற முடியாது. பால் தாக்கரே யாருடைய சொத்தும் கிடையாது. " என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்