மராட்டிய அரசியலில் பரபரப்பு: பா.ஜனதா மீது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கடும் அதிருப்தி

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update: 2024-03-07 19:38 GMT

மும்பை,

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அடுத்ததாக 48 நாடாளுமன்ற தொகுதிகள் கொண்ட மராட்டியத்தில், 35 இடங்கள் வரை போட்டியிட பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

இற்காக மும்பை சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தொகுதி பங்கீடு குறித்து சிவசேனா தலைவரான முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவரான துணை முதல்-மந்திரி அஜித்பவாரிடம் பேசினார். அப்போது சிவசேனாவுக்கு 8 தொகுதிகளையும், அஜித்பவார் தேசியவாத காங்கிரசுக்கு 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. இதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கிடையே அறிக்கை போர் நடந்து வருவதால், மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்