தலைக்கு ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு கைது

தலைக்கு 15 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-09-18 12:06 GMT

மும்பை,

சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, நக்சலைட்டுகள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தலைக்கு அரசு சார்பில் லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்படுவதுண்டு.

இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்டு முக்கிய தலைவர் தீபக் என்கிற கரு குலஸ் (45). மாவோயிஸ்டு தீபக் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் தீபக்கின் தலைக்கு ஜார்க்கண்ட் அரசு ரூ.15 லட்சம் சன்மானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், மாவோயிஸ்டு முக்கிய தலைவர் தீபக் மராட்டிய மாநிலம் பல்ஹரில் பதுங்கி இருப்பதாக மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து பல்ஹர் மாவட்டம் நலசொபரா பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் தலைக்கு 15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு முக்கிய தலைவர் தீபக்கை போலீசார் கைது செய்தனர். காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற தீபக் நலசொபரா பகுதிக்கு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்