மராட்டியத்தில் புதிதாக 2 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,327 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. அதன்படி, மராட்டியத்தில் இன்று 2 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,327 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு இன்று உயிரிழப்பு ஏற்படவில்லை. அதிகபட்சமாக மும்பையில் 7,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.