பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது - மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தகவல்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்து குறித்து அரசு ஆலோசித்து வருவதாக மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

Update: 2023-01-22 04:29 GMT

மும்பை,

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவது குறித்த தங்கள் முடிவை ஏற்கெனவே தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் பஞ்சாப் மாநில அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்தான அறிவிப்பை வெளியிட்டது. இமாசல பிரதேச மாநில அரசும் இது குறித்தான முடிவை மேற்கொண்டு

வருகிறது.

இந்தநிலையில், மராட்டிய மாநிலத்தில் வர இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

மாநில கல்வித்துறை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும். இதன் கீழ், ஒரு ஊழியருக்கு கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீத தொகையை ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு என்றார்.

சமீபத்தில் நடைபெற்ற டாவோஸ் உச்சிமாநாட்டில் முதலீட்டு திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு மாநில அரசு தனது பணியின் மூலம் பதிலளிக்கும் என்றும் ஷிண்டே கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முந்தைய மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கேள்வி எழுப்பினார்.

சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்போது, அவற்றின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்