புதிய இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்றக் கட்டிடம் - ஷாருக்கான் பாராட்டு
அரசியலமைப்பு சட்டத்தை நிலைநாட்டும் மக்களுக்கு அற்புதமான புதிய வீடு என்று நாடாளுமன்றம் குறித்து ஷாருக் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். டெல்லியில் நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் தலைமையிலான குழுவினர் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 21 ஆதினங்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில் நமது அரசியலமைப்பை நிலைநிறுத்தும் மக்களுக்கு ஒரு அற்புதமான புதிய வீடு என்று புதிய நாடாளுமன்றம் குறித்து ஷாருக் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "நமது அரசியலமைப்பை நிலைநிறுத்தும் மக்களுக்கு என்ன ஒரு அற்புதமான புதிய வீடு, ஒவ்வொரு குடிமகனையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த மகத்தான தேசம் மற்றும் நரேந்திரமோடி அவரது ஒரே மக்களின் பன்முகத்தன்மையை பாதுகாக்கிறது.
புதிய இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்றக் கட்டிடம், ஆனால் இந்தியாவுக்கு மகிமை என்ற பழைய கனவுடன். ஜெய் ஹிந்த்!" என்று ஷாருக்கான் பதிவிட்டுள்ளார்.