மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும்: ஜெ.பி.நட்டா உறுதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஜெ.பி.நட்டா கூறினார்.;

Update: 2024-08-02 07:53 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய நிகழ்வின்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் பற்றி திமுக எம்.பி., ஆ.ராசா பேசினார். அப்போது 5 ஆண்டுகள் ஆகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒரு செங்கல் கூட நிறுவப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி, அதன்பின் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது அல்லது கட்டுமான பணிகளை மேற்கொள்வது போன்ற எந்த பணிகளும் நடைபெறவில்லை

4 ஆண்டுகளுக்கு முன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது ஆனால் இதுவரை கட்டடம் கட்டப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டி முடிக்கப்படும்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜெ.பி.நட்டா பதிலளிக்கையில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். சில தொழில்நுட்ப காரணங்களுக்காக கட்டுமானப் பணிகள் தாமதம் ஆகிறது;அதை நாங்கள் ஏற்கிறோம். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்