தம்பதியை குத்திக்கொன்ற வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை மத்தியபிரதேச கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

அப்போது அந்த 3 பேரும் புஷ்பராஜ் மற்றும் நீலத்தை சரமாரியாக கத்தியால் குத்தினர்.

Update: 2023-04-28 17:04 GMT

ஜாபல்பூர், 

உத்தரபிரதேசத்தின் ஜாபல்பூர் மாவட்டம் கோரக்பூர் நகரில் வசித்து வந்த தம்பதி புஷ்பராஜ் குஷ்வா-நீலம். இவர்களுடன் புஷ்பராஜின் சகோதரர் கோலு, அவரது மனைவி மற்றும் 5 வயது மகன் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி புஷ்பராஜின் வீட்டுக்குள் புகுந்த ரவி, ராஜா மற்றும் வினய் ஆகிய 3 பேர் கோலுவிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோலு, அவரது மனைவி மற்றும் மகனை கத்தியால் குத்தினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த புஷ்பராஜ், நீலம் ஆகிய இருவரும் கோலு மற்றும் அவரது குடும்பத்தை காப்பாற்ற முற்பட்டனர்.

அப்போது அந்த 3 பேரும் புஷ்பராஜ் மற்றும் நீலத்தை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தம்பதியை குத்திக் கொலை செய்த ரவி, ராஜா, வினய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாபல்பூர் கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்றுமுன்தினம் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது ரவி, ராஜா, வினய் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி கோர்ட்டு அவர்களை குற்றவாளிகளாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்த வழக்கில் அவர்கள் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்