மத்திய பிரதேசம்: காங்கிரஸ் மூத்த தலைவர் காரில் சென்ற போது பைக் மீது மோதி விபத்து

காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக திக்விஜய் சிங் தெரிவித்தார்.

Update: 2023-03-10 11:35 GMT

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த நபர், திடீரென யூ-டர்ன் எடுத்துள்ளார்.

இதனால் திக்விஜய் சிங் சென்ற கார் அந்த பைக்கின் மீது மோதியது. இந்த விபத்தில், பைக்கில் வந்த 20 வயது இளைஞர் காயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அந்த நபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், காயமடைந்த நபருக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்துள்ளதாகவும், தங்கள் கார் மெதுவான வேகத்தில் சென்றதால், பைக்கில் வந்தவருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்