இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த குடியிருப்பை ரூ.252 கோடிக்கு வாங்கிய நீரஜ் பஜாஜ்!

மலபார் ஹில் பகுதியில் இதுவரை யாரும் வாங்கிடாத விலையில் அடுக்குமாடி குடியிருப்பை சுமார் ரூ. 252 கோடிக்கு வாங்கி உள்ளார்.

Update: 2023-03-15 14:04 GMT

மும்பை,

தெற்கு மும்பையில் உள்ள வாக்கேஷ்வர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் தொழிலதிபர் நீரஜ் பஜாஜ் 252 கோடி ரூபாய் வீடு வாங்கியுள்ளார். லோதா குழுமத்தை சேர்ந்த மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் நிறுவனம் இந்த குடியிருப்பை கட்டி வருகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து நீரஜ் பஜாஜ் இந்த வீட்டை வாங்கியுள்ளார். அவர் வாங்கியுள்ள வீடு 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களை கொண்டது. இதுவே இந்தியாவில் மிக அதிகமான தொகைக்கு விற்கப்பட்ட வீடு ஆகும்.

சென்ற மாதம் இதே மும்பை நகரில் வொர்லி டவரில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்த மற்றொரு ஆடம்பர வீடு ரூ.240 கோடிக்கு விலை போனது. அனைத்து விதமான சொகுசு வசதிகளும் உள்ள அந்த வீட்டை வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவரான தொழில் அதிபர் பி. கே. கோயங்கா வாங்கி இருந்தார். அப்போது அதுதான் மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீடாக இருந்தது. ஆனால் ஒரே மாதத்திற்கு உள்ளாகவே நீரஜ் பஜாஜ் ரூ.252 கோடிக்கு வீட்டை வாங்கி அந்த சாதனையை முறியடித்துவிட்டார்.

நீரஜ் வாங்கி இருக்கும் லோதா மலபார் டவர் வீட்டிற்காக ஒரு சதுர அடிக்கு ரூ.1.40 லட்சம் வீதம் செலவிட்டுள்ளார். லோதா மலபார் டவர் தெற்கு மும்பையில் கவர்னர் மாளிகைக்கு மிக அருகில் கட்டப்படுகிறது. 31 மாடிகள் கொண்ட 3 பிரிவுகளாக பிரமாண்டமுறையில் எழுப்பி வரும் இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தொடக்க நிலையில் தான் உள்ளன. 2026ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன் இதனைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மும்பையில் கோட்டீஸ்வரர்கள் அதிகம் வசிக்கும் மலபார் ஹில் பகுதியில் இதுவரை யாரும் வாங்கிடாத விலையில் அடுக்குமாடி குடியிருப்பை சுமார் ரூ. 252 கோடிக்கு வாங்கி உள்ளார். பஜாஜ் ஆட்டோ நிறுவன தலைவர் நீரஜ் பஜாஜ்.

இந்த ஆடம்பர ட்ரிபிளக்ஸ் பென்ஹவுஸ் அடுக்குமாடி குடியிருப்பை, பிரபல லோதா குரூப் நிறுவனத்திடம் இருந்து வாங்கி உள்ளார் நீரஜ்.

Tags:    

மேலும் செய்திகள்