பஞ்சாப்: வேளாண் துறை அதிகாரி 8 வயது மகனுக்கு விஷம் கொடுத்து, தானும் குடித்து தற்கொலை

பஞ்சாபில் வேளாண் துறை அதிகாரி ஒருவர், 8 வயது மகனுக்கு விஷம் கொடுத்து, தானும் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-07 23:35 GMT

அமிர்தசரஸ்,

பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் விவசாயத் துறை அதிகாரி தன் 8 வயது மகனுக்கு விஷம் கொடுத்ததுடன், தானும் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவரது சக பணியாளர் ஒருவர் கூறும்போது, கடந்த திங்கட்கிழமை தான் முதன் முறையாக அவர் தனது 8 வயது மகனை அலுவலகத்திற்கு அழைத்துவந்தார். தனியார் வங்கியில் மூத்த அதிகாரியான அவரது கணவர், காலையில் அவர்களை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், கதவை வெளிப்பக்கமாக பூட்டிய அவர், பின்கதவு வழியாக உள்ளே சென்று தன் 8 வயது மகனுக்கு விஷம் கொடுத்ததுடன், தானும் குடித்துள்ளார். போன் அழைப்பை ஏற்காததால், அவரது கணவர் மாலையில் அலுவலகத்திற்கு வந்தபோது, இருவரும் விஷம் குடித்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் காப்பாற்ற முடியவில்லை, என்று போலீசார் தெரிவித்தனர். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

அவரது அலுவலகத்தில் இருந்து தற்கொலை கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறிய போலீசார், அவரது செல்போனிலும் சந்தேகப்படும்படி எதுவும் கிடைக்கவில்லை என்று கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்