நாடாளுமன்ற தேர்தல்: லட்சத்தீவில் 83.88 சதவீத வாக்குகள் பதிவு

யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

Update: 2024-04-20 08:29 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாடு, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மராட்டியம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான்-நிகோபார், காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி என 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் மொத்தம் 10 தீவுகளில் மக்கள் வசிக்கின்றனர். இந்த தீவுகளில் 55 வாக்குச்சாவடிகள் மூலம் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், லட்சத்தீவில் மொத்தம் 83.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவில் மொத்தமுள்ள 57,784 வாக்காளர்களில் 48,468 பேர் வாக்களித்துள்ளதாக லட்சத்தீவு தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் நடந்த மக்களவை தேர்தலின்போது அங்கு மொத்தம் 85.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்