திருமண நிகழ்ச்சியில் சமையலின் போது சிலிண்டர் வெடித்து விபத்து - 2 பெண்கள் பலி

திருமண நிகழ்ச்சியில் உணவு சமைத்துக்கொண்டிருந்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 பெண்கள் உடல்கருகி உயிரிழந்தனர்.

Update: 2023-02-19 11:54 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் சிகந்தரா பகுதியில் இன்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் உணவு சமையல் வேலைகளும் நடைபெற்று வந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக சமைத்துக்கொண்டிருந்தபோது சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர சிலிண்டர் வெடிப்பில் சமையல் வேலை செய்துகொண்டிருந்த லீலா, ஷீலா என்ற 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிலிண்டர் பின் சரிவர மூடப்படாமல் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்