வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்,
வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரை பகுதியையொட்டிய வடமேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட சூறாவளி சுழற்சியால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களில் வடக்கு, வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா, ஜார்கண்ட் வழியாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரக்கூடும்.
இதனால் ஒடிசா, மேற்கு வங்காள மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும்.
மேலும் இந்த 2 நாட்களிலும் ஓடிசா கடற்கரை பகுதியில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
எனவே இப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.