மராட்டியத்தில் 'லவ் ஜிகாத்' வழக்குகள் பெரிய எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது - பட்னாவிஸ்

காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையில் லவ் ஜிகாத் வழக்குகள் பெரிய எண்ணிக்கையில் கண்டறியப்பட்டதுள்ளது என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.;

Update: 2023-06-03 23:44 GMT

சட்ட கோரிக்கை

முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை குறிவைத்து திருமணம் செய்து அவர்களை கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவதாக வலதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன. இது 'லவ் ஜிகாத்' என்று கூறப்படுகிறது. இதற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. பா.ஜனதா கட்சியும் இதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணையின்போது 'லவ் ஜிகாத்' வழக்குகள் பெரிய எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:-

தவறாக வழிநடத்த முயற்சி

மராட்டியத்தில் காணாமல் போனதாக வந்த புகார்களில் 90 முதல் 95 சதவீதம் வரை கண்டறியப்பட்டு உள்ளது. இதில் சில வழக்குகளில் திருமணமான நபர்கள் கூட தவறான வாக்குறுதிகளை அளித்தும், தவறாக அடையாளங்களை காட்டியும் பெண்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்துள்ளனர். இதில் லவ் ஜிகாத் வழக்குகளும் அதிக அளவில் கண்டறியப்பட்டு உள்ளது.

நாங்கள் லவ் ஜிகாத் சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம் என்று நான் முன்பே கூறியிருக்கிறேன். இதற்காக தற்போது நடைமுறையில் உள்ள பல்வேறு சட்டங்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்