லாரி - ஆம்னி பஸ் மோதல்; கிளீனர் பரிதாப சாவு
லாரி - ஆம்னி பஸ் மோதிய விபத்தில் கிளீனர் பலியானார்.
தார்வார்: கர்நாடக மாநிலம் தார்வார் புறநகர் ஹலியால் அருகே பெங்களூரு - புனே நெடுஞ்சலையில் இன்று காலையில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு தனியார் ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் லாரி மற்றும் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் அப்பளம்போல நொறுங்கியது. லாரியில் இருந்த கிளீனர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
பஸ்சில் பயணித்து வந்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.