நுபுர் சர்மாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

Update: 2022-07-02 11:12 GMT

புதுடெல்லி,

பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து பேசிய விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மாவை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்தச் சூழலில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாகப் பல மாநிலங்களில் நுபர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நுபுர் சர்மவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவதூறு கருத்து தொடர்பாக நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்