'சோனியா மன்னிப்பு கேட்டால்தான் மக்களவை இயங்கும்' பா.ஜ.க. மூத்த தலைவர் அறிவிப்பு
ஜனாதிபதி பற்றிய ஆதிர்ரஞ்சன் சவுத்ரி விவகாரத்தில் நாடாளுமன்ற மக்களவையும், மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
புதுடெல்லி,
ஜனாதிபதி பற்றிய ஆதிர்ரஞ்சன் சவுத்ரி விவகாரத்தில் நாடாளுமன்ற மக்களவையும், மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இதையொட்டி பா.ஜ.க. மூத்த தலைவர் நிஷிகாந்த் துபே எம்.பி. டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:- பழங்குடி இனத்தை அவமதிப்பதை பா.ஜ.க. சகித்துக்கொள்ளாது. சோனியா காந்தி மன்னிப்பு கேட்ட பின்னர்தான் மக்களவை இயங்கும். ஜனநாயகத்தையும், நாடாளுமன்றத்தையும் அவமதித்த வரலாறு காங்கிரசுக்கு உண்டு.
2012-ல் சோனியா காந்தியின் குடும்ப அறக்கட்டளை பற்றி பேசியதற்கு அப்போதைய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸ் 10 நோட்டீஸ் வழங்கியது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.