தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக தேர்தல்; ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.;
டெல்லி,
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றார். ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறும் என்றார்.
அதேபோல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் என்றார். விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றார்.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.