எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-08-08 05:43 GMT

டெல்லி,

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மக்களவையில் அவை நடவடிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின.

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்