மதுபானக் கொள்கை வழக்கு: கெஜ்ரிவால், சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால், சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-07-31 13:55 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் பி.ஆர்.எஸ். மூத்த தலைவர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும் சி.பி.ஐ. வழக்கில் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார். இவர்கள் மூன்று பேரின் நீதிமன்ற காவல் இன்றோடு நிறைவடைந்த நிலையில், மூன்று பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, மூன்று பேரின் நீதிமன்ற காவலையும் வரும் ஆகஸ்ட் 13-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்