மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் ஜூலை 6-ம் தேதி வரை நீட்டிப்பு
மணீஷ் சிசோடியாவை கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சி.பி.ஐ. கைது செய்தது.
புதுடெல்லி,
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும், அவர்மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது.டெல்லி ஐகோர்ட்டு மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனுவை நிராகரித்து கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூலை 6-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றம் உத்தரவிட்டது.