வாலிபருக்கு ஆயுள் தண்டனை

மைனர்பெண் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2023-02-09 21:27 GMT

மங்களூரு:-

மைனர்பெண் பலாத்காரம்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேணூரை சேர்ந்தவர் ராதகிருஷ்ணன் (வயது 26). இவருக்கும் உடுப்பி மாவட்டம் கார்கலா பகுதியை சேர்ந்த மைனர்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி பழகி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ராதகிருஷ்ணன், மைனர்ெபண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு யாரும் இல்லாததை பயன்படுத்தி கொண்ட அவர், மைனர்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

போக்சோவில் கைது

ஆனாலும் இதுபற்றி அந்த மைனர்பெண் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுபற்றி கார்கலா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராதகிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கார்கலா போலீசார், உடுப்பி கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இதுதொடர்பான விசாரணை உடுப்பி கோர்ட்டில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சீனிவாச சுவர்ணா தீர்ப்பு வழங்கினார். அப்போது ராதாகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்