முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் டெல்லி சேவைகள் மசோதா 2023-க்கு எதிராக திமுக வாக்களித்ததற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு கொண்டுவந்த டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதா, 2023-ஐ எதிர்த்து வாக்களித்த திமுகவுக்கு, 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் டெல்லி மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதற்காக மனமார்ந்த பாராட்டுக்களைப் பதிவு செய்கிறேன்.
இந்திய அரசியலமைப்பின் கொள்கைகள் மீது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை பல்லாண்டுகளுக்கு நினைவுகூரப்படும். அரசியலமைப்பை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறேன் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.