சிறுத்தைப்புலிகள் வந்துவிட்டது; இளைஞர்களுக்கு 16 கோடி வேலை எப்போது வரும்? ராகுல்காந்தி கேள்வி...!
நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைப்புலிகள் வந்துவிட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எப்போது வரும் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் அழிந்து போன சிறுத்தைப்புலிகள் இனத்துக்கு புத்துயிரூட்டும் விதத்தில், நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைப்புலிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலத்தில் காட்டுக்குள் விட்டார்.
இந்த நிலையில், நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைப்புலிகள் வந்துவிட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எப்போது வரும் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 8 சிறுத்தைப்புலிகள் வந்து விட்டது. ஆனால் 8 ஆண்டுகளில் வந்திருக்க வேண்டிய 16 கோடி வேலைவாய்ப்புகள் எப்போது வரும்? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது சவாலாக உள்ளது. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.