பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் பேட்டி
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.;
ஹாசன்:
ஹாசன் மாவட்டம் தி.நகர் அருகே சக்லேஸ்புரா சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது முப்பெரும் மாநில மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் ,எம்.பி.யுமான பினோய் விஸ்வம் கூறியதாவது:-
-மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து வகுப்புவாத கலவரங்கள் நடைபெறுகிறது. மேலும் பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. இந்துத்வா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சின் கைபாவையாக பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். இந்த வகுப்புவாத கலவரத்திற்கு முடிவு கட்டுவதற்கும், பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்கும் நோக்கிலும் இடதுசாரி கட்சிகள் அனைத்து ஒன்றிணையவேண்டும். அதன்படி வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சியை தோற்கடிக்கவேண்டும். ஒருவேலை அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் மீண்டும் வன்முறை தலை தூக்கிவிடும். எனவே மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு பா.ஜனதா கட்சிக்கு முடிவு கட்டவேண்டும். இந்த நோக்கத்தை முன் வைத்துதான் மாநாட்டை தொடங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.