தலித் அமைப்பின் தலைவர் அரிவாளால் வெட்டிக் கொலை

தலித் அமைப்பின் தலைவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-06-15 16:24 GMT

துமகூரு: துமகூரு மாவட்டம் குப்பி டவுனை சேர்ந்தவர் நரசிம்ம மூர்த்தி என்கிற குருமூர்த்தி(வயது 45). தலித் சங்கர்ஷ சமிதி அமைப்பின் தலைவரான இவர் குப்பி நகரசபையின் 9-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ஆவார். மேலும் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் குப்பி பி.எஸ்.ரோடு பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று ெகாண்டிருந்தார்.

அப்ேபாது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேேய உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் முன்விரோதத்தில் கொலை நடந்திருப்பதாக போலீசார் கருதுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்