ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - சந்திரபாபுநாயுடு

ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று சந்திரபாபுநாயுடு கூறினார்.;

Update: 2022-08-24 21:24 GMT

திருப்பதி,

சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதிக்கு உட்பட்ட லோகோலுபள்ளியில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயலாளர் சந்திரபாபுநாயுடு நேற்று லோகோலுபள்ளிக்கு வந்தார்.

அதைத்தொடர்ந்து ராமகுப்பம் மண்டலம் கொள்ளுப்பள்ளியில் சந்திரபாபுநாயுடு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசியபடி வாகனத்தில் ஊர்வலமாக வந்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம், ஊர்வலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் குடிபோதையில் வந்து தகராறில் ஈடுபடுகிறார்கள். என் மீது ரவுடிகளை ஏசி விடுகிறார்கள். என்னை பார்த்தாலே ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் கோபம் கொள்கிறார்கள்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இதுவே உதாரணம். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ஜனநாயக விரோத போக்கை கடைப்பிடிக்கின்றனர். அவர்களின் செயல் கவலையளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்