இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு; 20 உடல்கள் மீட்பு

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

Update: 2024-08-22 02:16 GMT

சிம்லா,

இமாசல பிரதேசத்தின் சிம்லா நகரில் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் வீடுகள், குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்தும், சிலர் உயிரிழந்தும் உள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.

அவர்களை மீட்கும் மற்றும் தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சிம்லா மாவட்டத்தின் நிர்வாகத்தினர் அவசர கூட்டம் ஒன்றை நடத்தினர். சாலை மறுசீரமைப்பு பணியை தொடங்குவதற்கான சூழலை பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதுவரை வெள்ள பாதிப்பில் சமீஜ் பகுதியில் இருந்து 20 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. சட்லெஜ் ஆற்றில் மிதந்து வந்த உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மறுசீரமைப்பு பணிக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என காவல் துறை துணை ஆணையாளர் அனுபம் காஷ்யப் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்