உத்தரவாத திட்டங்கள் குறித்து மந்திரிகளே குழப்பத்தில் உள்ளனர்; குமாரசாமி கிண்டல்

உத்தரவாத திட்டங்கள் குறித்து மந்திரிகளே குழப்பத்தில் உள்ளனர் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

Update: 2023-06-08 21:19 GMT

பெங்களூரு:

உத்தரவாத திட்டங்கள் குறித்து மந்திரிகளே குழப்பத்தில் உள்ளனர் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கிரகஜோதி திட்டம்

கர்நாடக அரசு 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்துவதாக கூறியுள்ளது. ஆனால் அவற்றுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. குறிப்பாக கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பயனை பெற பல்வேறு நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. இதனால் இந்த இலவச திட்டங்களில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள். மந்திரிகளே குழப்பத்தில் தான் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இந்த திட்டங்கள் குறித்து கேலி-கிண்டல் செய்யப்படுகிறது. கிரகஜோதி திட்டம் குறித்து மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜிக்கே புரியவில்லை. அந்த திட்டம் பற்றி அதிகாரிகள் அவருக்கு தகவல்களை கூறவில்லையா?.

காலவிரயம் செய்கிறது

தேர்தல் நேரத்தில் உத்தரவாத திட்டங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் என்ன பேசினர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அரசு நிபந்தனைகளை விதித்து காலவிரயம் செய்கிறது. காங்கிரசை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்பு மின்சாரத்துறையில் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் விலை யூனிட்டுக்கு ரூ.9¾ என நிர்ணயம் செய்தனர். ஆனால் அது யூனிட் ரூ.2.30-க்கு கிடைத்தது. இந்த முறைகேடு குறித்து விசாரிக்க சட்டசபை கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அது என்ன ஆனது என்று தெரியவில்லை. பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவதாக அரசு சொல்கிறது. இதன் மூலம் குழந்தைகள் படிப்புடன் அரசு விளையாடுகிறது. முந்தைய பா.ஜனதா அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து பாடப்புத்தகங்களை அச்சிட்டு பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டது. இது மக்களின் பணம் இல்லையா?. குழந்தைகளுக்கு தூய்மையான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்