பா.ஜனதா பிரமுகர் கொலை: எடியூரப்பா கண்டனம்
பா.ஜனதா பிரமுகர் கொலைக்கு, எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன். குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை கூறிக்கொள்கிறேன்.
கொலையாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. அனைவரும் அமைதி காக்க வேண்டும். சமூக விரோத சக்திகளை அழிக்கும் நோக்கத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.