காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தப்பட்ட 2 மாணவிகள் மீட்பு; இருவர் கைது

காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தப்பட்ட 2 மாணவிகளை மீட்ட போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.

Update: 2022-09-21 18:45 GMT

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா நங்கிலி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்த இரு மாணவிகள் கடந்த 19-ந் தேதி பள்ளிக்கூடம் சென்றுள்ளனர். ஆனால் பள்ளிக்கூடம் விட்டதும் மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் நங்கிலி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மாணவிகளை சிலர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவிகளை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாணவிகள் 2 பேரையும், நங்கலி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட முதுகெரே கிராமத்தை சேர்ந்த முனிராஜி மற்றும் சுப்ரமணி ஆகிய இருவரும் கடத்தி வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் முதுகெரே கிராமத்திற்கு சென்று மாணவிகளை மீட்டனர். மேலும் முனிராஜ், சுப்ரமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட 2 மாணவிகளையும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கைதான 2 பேரும் மாணவிகளை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்